2016 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரைத் தொகுப்பாக (மொழிபெயர்ப்பு) க.பூரணச்சந்திரன் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடு வெளியிட்ட ‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு’ நூலை தேர்ந்தெடுத்தமைக்கு ஆனந்த விகடனுக்கு நன்றி…
சிறந்த கட்டுரைத் தொகுப்பு (மொழிபெயர்ப்பு)
இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு – வெண்டி டோனிகர்
தமிழில்: க.பூரணச்சந்திரன்
எதிர் வெளியீடு
இந்து மதம் மீதும் `இந்துக்கள்’ எனப்படும் மக்கள் மீதும் விருப்பு வெறுப்பற்ற ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கிறார் வெண்டி டோனிகர். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், தொல்பொருள் ஆய்வுகள், வரலாற்றுக் குறிப்புகள், வாய்மொழித் தரவுகள், நாட்டார் நம்பிக்கைகள், பக்தி இலக்கியங்கள், கலைவழிச் சான்றுகள் போன்ற பல்வேறு ஆதாரங்களோடு இந்து மதத்தை அதற்குத் தேவையான உயரத்துக்குச் சென்று ஒரு பறவைப் பார்வை பார்க்கிறார். இந்து மதத்தின் சுதந்திரக் கலப்புத்தன்மை, சகிப்புத்தன்மை போன்ற அதன் இளகிய குணாம்சங்களோடு, வரலாற்றில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அது செய்த கொடுமைகளையும் விமர்சனபூர்வமாக ஆராய்கிறது இந்த நூல். மூலநூலின் எளிமையும் ஆழமும் வெளிப்பட மொழிபெயர்த்திருக்கும் க.பூரணச்சந்திரன், பாராட்டுக்கு உரியவர்.
ஏனைய செய்திகள்